உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டூ - வீலர் வாகனம் திருட்டு

டூ - வீலர் வாகனம் திருட்டு

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கிணார் கிராமத்தைச் சேர்ந்தவர் இயேசுபாதம், 57. இவர், மதுராந்தகம் -- திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையில், அரையப்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, வாகனம் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, மதுராந்தகம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !