உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / லேப்டாப், பணம் திருடிய திட்டக்குடி வாலிபர் கைது

லேப்டாப், பணம் திருடிய திட்டக்குடி வாலிபர் கைது

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் யோகேஷ், 28. இவர், செங்கல்பட்டு அருகில் உள்ள மகேந்திரா சிட்டியில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு, 10:00 மணியளவில் துாங்க சென்றுள்ளார்.தொடர்ந்து, இரவு 12:00 மணியளவில் எழுந்து பார்த்த போது, அருகில் இருந்த மடிக்கணினி, 10,500 ரூபாய் காணாமல் போனது தெரிந்தது. இதுகுறித்து அவர், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.இந்நிலையில் நேற்று, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த வாலிபர் ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர், கடலுார் மாவட்டம், திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த அரவிந்த், 24, என்பதும், மடிக்கணினியை திருடியதும் தெரிந்தது.மடிக்கணினி மற்றும் 10,500 ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், அவிந்தை கைது செய்தனர்.மேலும், இதுபோன்று வேறு இடங்களில் கைவரிசை காட்டினாரா என, கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை