மேலும் செய்திகள்
கொடூர் சாலையை சீரமைக்க வேண்டும்
1 minutes ago
குட்கா விற்ற வாலிபர் கைது
3 minutes ago
இன்று இனிதாக (நாள்/18/11/2025/செவ்வாய்)
3 minutes ago
ஆப்பூர் ஏரியில் ஆண் சடலம் மீட்பு
19 hour(s) ago
மறைமலை நகர்: கீழக்கரணை பகுதியில், கஞ்சா வைத்திருந்த இருவரை, போலீசார் கைது செய்தனர். மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை பகுதியில், மறைமலை நகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த நபர்கள் இருவர், போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில், 1 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், பிடிபட்ட நபர்கள் கீழக்கரணை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 27, மற்றும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் குமார்,31, எனத் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
1 minutes ago
3 minutes ago
3 minutes ago
19 hour(s) ago