மொபைல் போன் பறிப்பு வாலிபர்கள் இருவர் கைது
தாம்பரம்:கரூர் மாவட்டம், உப்பனாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், 19. சென்னை மாம்பலத்தில் தங்கி, அங்குள்ள பிரபல துணிக்கடையில் பணிபுரிகிறார்.சொந்த ஊருக்கு செல்வதற்காக, தாம்பரம் ரயில் நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு சென்றுள்ளார்.அங்கு வந்த இருவர், சிவகுமாரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போனை பறித்து சென்றனர்.தகவலறிந்த போலீசார், அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின், வழிப்பறியில் ஈடுபட்ட இருவரையும் பிடித்தனர்.விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், கீழ் ஆத்தனுாரைச் சேர்ந்த சிவகண்டன், 32, திருவண்ணாமலை இளங்கோ என்ற ஜான்பீட்டர், 38, என்பது தெரியவந்தது.சிவகண்டன், இரண்டு மாதங்களாக, தாம்பரம் பேருந்து நிலையத்தில் தங்கி, பலரிடம் மொபைல் போன் பறித்ததும் தெரியவந்தது.'டாஸ்மாக்' கடையில் அறிமுகமான சிவகண்டனுடன் சேர்ந்து, ஜான்பீட்டர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.