உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  வீடு புகுந்து நகை திருட்டு இரு வாலிபர்கள் சிக்கினர்

 வீடு புகுந்து நகை திருட்டு இரு வாலிபர்கள் சிக்கினர்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில், வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில், இரு வாலிபர்களை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கூடுவாஞ்சேரி -- -நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள உ ஷா நகரைச் சேர்ந்தவர் லெனின், 35; வல்லாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 12ம் தேதி இவர் வெளியூர் சென்ற நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 2 சவரன் தங்க நகை, 210 கிராம் வெள்ளி நகைகள் திருடப்பட்டன. புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த இரு வாலிபர்களை, ரயில்வே போலீசார் பிடித்து, கூடுவாஞ்சேரி குற்றவியல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை, ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த சாமுவேல், 24, மதுரவாயல், கந்தசாமி நகரைச் சேர்ந்த ஹரிஷ், 22, என தெரிந்தது. தொடர் விசாரணையில், லெனின் வீட்டில் திருடியது இவர்கள் தான் என்பதும், இருவர் மீதும் ஏற்கனவே கோயம்பேடு, விருகம்பாக்கம், ஆவடி, நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து இரு வாலிபர்களையும் கைது செய்த போலீசார், நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 2 சவரன் தங்க நகை மற்றும் 210 கிராம் வெள்ளி நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி