உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகத்தில் தொடர் விபத்து அணிவகுத்து நின்ற வாகனங்கள்

மதுராந்தகத்தில் தொடர் விபத்து அணிவகுத்து நின்ற வாகனங்கள்

மதுராந்தகம் : மதுராந்தகம் ஏரிக்கரை மீது உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சென்னை மார்க்கத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.போதிய இடவசதி இன்றி உள்ளதால், மதுரை, திருச்சி, விழுப்புரம் மார்க்கத்திலிருந்து சென்னை செல்லும் பேருந்துகள், சாலையிலேயே நிறுத்தி பயணியரை ஏற்றச் செல்கின்றனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.நேற்று, பேருந்தில் இருந்து இறங்கிய பயணியர், சாலையை கடந்த போது, தேசிய நெடுஞ்சாலையில் வந்த ஹோண்டா கார், பயணியர் மீது மோதாமல் இருக்க, கார் ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார்.இதனால், பின்னால் வந்த 5 கார்கள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.விபத்து காரணமாக, மதுராந்தகம் ஏரிக்கரையிலிருந்து சிலாவட்டம் வரை, 5 கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி