உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

 கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

செங்கல்பட்டு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், செங்கல்பட்டில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலு வலர்கள், செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் வளாகத்தில் நே ற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், கிராம நிர்வாக அலுவலகத்தை நவீனமயமாக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் மாவட்ட செயலர் சுதர்சன், மாவட்ட பொருளாளர் செல்வராஜ், மாநில உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை