உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மினி டேங்க்கை செயல்படுத்த கிராம மக்கள் எதிர்பார்ப்பு

மினி டேங்க்கை செயல்படுத்த கிராம மக்கள் எதிர்பார்ப்பு

பவுஞ்சூர்:நீலமங்கலம் கிராமத்தில், செயல்படாமல் உள்ள,'மினி டேங்க்' எனும் சிறு தண்ணீர் தொட்டியை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பவுஞ்சூர் அருகே நீலமங்கலம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கிராம மக்களுக்கு தினமும் குழாய்கள் வாயிலாக, குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.கூடுதல் நீராதாரமாக, குடியிருப்பு பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தெருவில், சில மாதங்களுக்கு முன் 'மினி டேங்க்' அமைக்கப்பட்டது.அதில், மின் மோட்டார் வாயிலாக தண்ணீர் ஏற்றி துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும் கிராமத்தினர் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில நாட்களாக, தண்ணீர் ஏற்றும் மின் மோட்டாரின் மீட்டர் பெட்டி பூட்டப்பட்டு உள்ளதால், தண்ணீர் ஏற்றாமல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இதனால், கிராமத்தினர் தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம், மினி டேங்க்கை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை