உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்

மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளப்புத்துார் ஊராட்சியில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், மனுநீதி நாள் முகாம் நடந்தது.இதில், ஊராட்சி மன்ற தலைவர் வரதன், துணைத் தலைவர் விஜயகுமார் வரவேற்றனர்.பின், சமூக பாதுகாப்பு திட்டம், வட்டார வளர்ச்சி அலுவலகம், மின்வாரியத் துறை, தொடக்க வேளாண்மை துறை, மகளிர் சுய உதவி குழு கடன், ஊட்டச்சத்து பெட்டகம், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்டவை 25.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.பின், பள்ளி வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த வேளாண்துறை, கால்நடை துறை, மருத்துவத்துறை, சமூக பாதுகாப்பு துறை செயல்பாடுகளை கண்டு, கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை