உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கரிக்கிலியில் சமூக நலக்கூடம் அமைக்கப்படுமா?

 கரிக்கிலியில் சமூக நலக்கூடம் அமைக்கப்படுமா?

மதுராந்தகம்: கரிக்கிலி ஊராட்சியில், சமூக நலக்கூடம் அமைக்க வேண்டு மென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகம் அருகே கரிக்கிலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கரிக்கிலி பகுதியில் சமூக நலக்கூடம் இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர். தங்களது வீட்டு திருமணம், சீமந்தம், பிறந்தநாள் விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த மண்டபம் தேடி மதுராந்தகம், நெல்வாய், உத்திர மேரூர் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், இப் பகுதி மக்கள் தனியார் மண்டபங்களில், அதிகம் பணம் செலுத்தி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். எனவே, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, கரிக்கிலி ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி