மேலும் செய்திகள்
கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ விழா துவக்கம்
04-Mar-2025
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் அடிவார பகுதியில் பொருட்கள், காலனி காப்பகம் ஏற்படுத்த வேண்டுமென, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. நான்கு வேதங்கள், சிவபெருமானிடம் வரம் வேண்டி, இங்கு மலைக்குன்றுகளாக வீற்றுள்ளன. குன்றின் உச்சியில், வேதகிரீஸ்வரர் சுயம்பு மலைக்கொழுந்தாக வீற்றுள்ளார். பக்தர்கள், மாதந்தோறும் பவுர்ணமி நாளில், கோவில் மலைக்குன்றுகளை வலம் வந்து, கிரிவலம் சென்று சுவாமியை தரிசிக்கின்றனர்.திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்ல இயலாதவர்கள், இங்கு திரண்டு வருவதால், பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கிரிவலம் வரும் பக்தர்கள், தாங்கள் கொண்டுவரும் பொருட்களையும், காலனிகளை வைக்கவும், இங்கு பாதுகாப்பகம் இல்லை. இதனால், பொருட்களை கைகளில் சுமந்து சென்று சிரமப்படுகின்றனர். எனவே, கோவில் அடிவார பகுதியில் பொருட்கள், காலனி பாதுகாப்பகம் ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.
04-Mar-2025