உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆலத்துார் சிட்கோ சாலையில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

ஆலத்துார் சிட்கோ சாலையில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

திருப்போரூர்:ஆலத்துார் சிட்கோ சாலையில், மின் விளக்குகள் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.திருப்போரூர் அடுத்த ஆலத்துாரில், 1982ல் சிட்கோ தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட்டது. இங்கு, 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில், 10,000க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.தொழிலாளர்கள் வேலை முடிந்து, இரவு 10:00 மணிக்குள் வீடு திரும்புகின்றனர்.அதே நேரத்தில் மூன்றாவது 'ஷிப்ட்'டுக்கும் ஊழியர்கள் வேலைக்கு செல்கின்றனர்.ஆலத்துார் சிட்கோவிற்கு செல்லும் பிரதான சாலையில், மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால், அந்த சாலை கும்மிருட்டாக காணப்படுவதால், பெண்கள் உட்பட அனைவரும், அந்த சாலை வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.எனவே, இரவில் பெண்கள் பாதுகாப்பாக செல்ல, இந்த சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை