வனப்பகுதி குறுக்கிடும் சாலைகளை அமைக்க அனுமதி... கிடைக்குமா?: 31 ஊராட்சிகளில் போக்குவரத்து வசதியின்றி மக்கள் அவதி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 31 ஊராட்சிகளில், வனப்பகுதிகளில் குறுக்கிடும் சாலைகளில்சீரமைப்பு பணி மேற்கொள்ள, வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. இந்த சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், காட்டாங்கொளத்துார், அச்சிறுபாக்கம், திருக்கழுக்குன்றம், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 31 ஊராட்சிகளில், வனப்பகுதிகள் உள்ளன.
அனுமதி கிடைப்பது சிரமம்
கரிக்கிலி பறவைகள் சரணாலயத்திலிருந்து வெள்ளப்புத்துார் செல்லும் சாலை, முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்க, நிர்வாக அனுமதி பெற்று துவங்கப்பட்டது. ஆனால், வனத்துறைக்கு உட்பட்ட பகுதியில் 1 கி.மீ.,க்கு சாலை அமைக்க முடியாமல், கடந்த சில மாதங்களாக தடையில்லா சான்று பெற முடியாமல், பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வனத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்து, அரசு திட்டங்கள் மற்றும் ஊராட்சிகளின் வளர்ச்சி திட்ட பணிகளை துவங்குவதற்கு மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கு, வனத்துறை அனுமதி அளித்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும். - கொடியான், 65, கரிக்கிலி. சாலை சேதமான வனப்பகுதிகள்
திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம்
ஊராட்சி சாலை பெயர் சோனலுார் சோனலுார் - பொளச்சலுார் சாலை பொன்மார் பொன்மார் - பொளச்சலுார் சாலை இள்ளலுார் பெரியார் நகர் மெயின் ரோடு ஆலத்துார் ஆலத்துார் - வெங்கலேரி சாலை தண்டரை ரெட்டிக்குப்பம் - ஒரத்துார் சாலை பெருந்தண்டலம் சிறுங்குன்றம் - பெருந்தண்டலம் சிறுங்குன்றம் சிறுங்குன்றம் பள்ளி சாலை - மருதேரி சாலை தண்டரை ஒரத்துார் சாலை பனங்காட்டுப்பாக்கம் பனங்காட்டுப்பாக்கம் சாலை பெரியஇரும்பேடு பெரிய இரும்பேடு மெயின்ரோடு அனுமந்தபுரம் சிங்கபெருமாள்கோவில் சாலை - ரெட்டிக்குப்பம் சாலை
* காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியம்
ஆப்பூர் தாலிமங்கலம் - ஆப்பூர் சாலை, வலையபுத்துார் சாலை வீராபுரம் வீராபுரம் சாலை குருவன்மேடு தாசரிகுன்னத்துார் சாலை திருவடிசூலம் திருவடிசூலம் - ஈச்சங்கரணை சாலை குமிழி ஊராட்சி அம்மணம்பாக்கம் - மேட்டுப்பாளை சாலை * அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியம்
ஒரத்துார் ஒரத்துார் சாலை கரிக்கிலி கரிக்கிலி - கே. சித்தாமூர் சாலை, வெள்ளப்புத்துார் சாலை அத்திவாக்கம் நெம்மேலி - அத்திவாக்கம் சாலை ஊனமலை மேட்டுப்பாளையம் - ஊனமலை சாலை
* புனிததோமையார் மலை ஊராட்சி ஒன்றியம்
பெரும்பாக்கம் சித்தலப்பாக்கம் ஊராட்சி சாலை* திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம்
நரப்பாக்கம் அகதீஸ்வரமங்கலம் - கொரப்பட்டு சாலை தத்தளூர் தத்தளூர் சாலை மாம்பாக்கம் வீராணம் ரோடு - மேட்டுமங்கலம் சாலை சோகண்டி காங்கேயன்குப்பம் சாலை மோசிவாக்கம் திருவானைக்கோவில் - சீயாளன்கொள்ளை சாலை