| ADDED : ஜன 07, 2024 11:18 PM
கூடுவாஞ்சேரி : நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் பின்புறம், புதிய தாலுகா அலுவலகம் கட்ட சில மாதங்களுக்கு முன் பூமி பூஜை போடப்பட்டு, கட்டட பணி நடந்து வருகிறது.புதிய தாலுகா அலுவலக கட்டுமானப் பணிகள், 80 சதவீதம் நிறைவு பெற்று, திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.இது குறித்து, வண்டலுார் தாசில்தார் ராஜேந்திரன் கூறியதாவது:மாம்பாக்கம், வண்டலுார், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி குறு வட்டங்களுக்கு உட்பட்ட மக்களுக்கு, தாலுகா அலுவலகம் வண்டலுாரில் தற்போது செயல்பட்டு வருகிறது.போதுமான இட வசதிகள் இல்லாததால், இங்கு வருகை தரும் மக்கள் சிரமம் அடைந்தனர். இதை கருத்தில் கொண்டு, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பயணியர் விடுதிக்கு சொந்தமான காலி மனையில், தாலுகா அலுவலகம் கட்ட, மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கியது.புதிய கட்டடம் கட்டுவதற்கு, சில மாதங்களுக்கு முன், கலெக்டர் ராகுல்நாத், அமைச்சர் அன்பரசன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது.தொடர்ந்து, கட்டட பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. தற்போது, 80 சதவீத பணிகள் நிறைவு பெற்று, திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.இதை பொங்கலுக்கு முன்பாக திறந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவதற்காக, அதிகாரிகள் தரப்பில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் திறக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.