உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குளவி கொட்டி பெண் உயிரிழப்பு

குளவி கொட்டி பெண் உயிரிழப்பு

மதுராந்தகம்:மதுராந்தகம் காவல் எல்லைக்குட்பட்ட குருகுலம் பகுதியைச் சேர்ந்த மனோகரன்,55 இவரது மனைவி லட்சுமி, 53. இவரது வீட்டின் அருகே உள்ள காட்டுவா மரத்தில் குளவி கூடு கட்டி இருந்தது.நேற்று, கூட்டில் இருந்து பறந்த செங்குளவிகள் மனோகரன், லட்சுமி மற்றும் வீட்டில் இருந்த மூவரை கொட்டி உள்ளது.அக்கம் பக்கத்தினர், இவர்களை மீட்டு, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாயிலாக கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில், லட்சுமி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.மனோகரனை, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மற்ற மூவரும், மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மதுராந்தகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை