மேலும் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
02-Sep-2025
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவிலில் கஞ்சா விற்ற வாலிபரை, மறைமலை நகர் போலீசார் கைது செய்தனர். சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகே, கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த நபர் ஒருவர், போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்த போது, 500 கிராம் கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர், சிங்கபெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், 26, என தெரிந்தது. இவர் சிங்கபெருமாள் கோவில், திருக்கச்சூர் உள்ளிட்ட பகுதிகளில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், இவர் மீது வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. தனுஷை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
02-Sep-2025