உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொது கஞ்சா வழக்கில் வாலிபர் கைது

பொது கஞ்சா வழக்கில் வாலிபர் கைது

மறைமலைநகர், மறைமலைநகர் ஜி.எஸ்.டி., சாலையில், நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக நடந்து வந்த நபர், போலீசாரைக் கண்டு ஓட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.இதில், பிடிபட்ட நபர் தாம்பரம் அடுத்த மேடவாக்கம், ஜல்லடையான்பேட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ், 24, என தெரிந்தது. மேலும் இவர் மீது, மறைமலைநகர் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது.இதையடுத்து தினேஷை கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை