உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கெட்டுப்போன இறைச்சி 10 கிலோ பறிமுதல்

கெட்டுப்போன இறைச்சி 10 கிலோ பறிமுதல்

அடையாறு, அடையாறு மண்டலத்தில், 13 வார்டுகள் உள்ளன. இங்குள்ள இறைச்சி கடைகளில், கெட்டுப்போன இறைச்சி விற்பனை செய்வதாக, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.நேற்று, கால்நடை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், அடையாறு பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். இதில், புதிய இறைச்சியில் கெட்டுப்போன இறைச்சியை கலந்து விற்பனை செய்வது தெரிந்து.இதையடுத்து, 10 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து, கிருமி நாசினி தெளித்து அழித்தனர். இதேபோல் கெட்டுப்போன இறைச்சியை விற்றால், கடை உரிமம் ரத்து செய்யப்படும் என, உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை