உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 130 ரவுடிகள் ஆவடியில் கைது

130 ரவுடிகள் ஆவடியில் கைது

130 ரவுடிகள் ஆவடியில் கைதுஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவுப்படி, நேற்று முன்தினம் ரவுடிகள் வேட்டை நடந்தது. அதன்படி கொலை, கொள்ளை, போதைப்பொருள் மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் தொடர்புடைய 130 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். இதில், செங்குன்றம் மற்றும் ஆவடி காவல் மாவட்டத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய 25 பேர் கைது செய்யப்பட்டனர். அதே போல், பிடியாணை பெற்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் இருந்த ஒருவர், பழைய குற்றவாளிகள் மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 104 பேர் உட்பட ஒரே நாளில் 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த ரவுடிகள் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி