உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகளிர் ஐ.டி.ஐ., சேர்க்கை வரும் 15 கடைசி நாள்

மகளிர் ஐ.டி.ஐ., சேர்க்கை வரும் 15 கடைசி நாள்

சென்னை, கிண்டியில் உள்ள அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஜூலை 1ம் தேதி முதல் நடந்து வருகிறது. பயிற்சி முடித்தவுடன் உடனடி வேலைவாய்ப்பு உள்ளது.பெண்களுக்கு வயது உச்ச வரம்பு கிடையாது. பயிற்சியின்போது அரசால் வழங்கப்படும் விலையில்லா சைக்கிள், பாட புத்தகங்கள், சீருடை, காலணி, பேருந்து மற்றும் ரயில் பாஸ், உதவித்தொகை 750 ரூபாய் வழங்கப்படும்.மேலும், தகுதியான மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின்படி மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த பயிற்சிக்கான கட்டணம் 200 ரூபாய். நேரடி சேர்க்கைக்கு வரும் 15ம் தேதி கடைசி நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்