உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூதாட்டியிடம் நுாதனமாக 2.5 சவரன் நகை ஆட்டை

மூதாட்டியிடம் நுாதனமாக 2.5 சவரன் நகை ஆட்டை

அயனாவரம்,பட்டாபிராம், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் கலைவாணி, 70; வீட்டு வேலை செய்கிறார். கடந்த 29ம் தேதி, அயனாவரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு பேருந்தில் வந்துள்ளார்.அயனாவரம் ரயில்வே குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய மூதாட்டி, பி.இ.கோவில் தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர், மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளார்.'இப்பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அதிகம் நடப்பதால், செயினை பையில் வைத்துக் கொள்ளுங்கள்' என, மூதாட்டியிடம் மர்ம நபர் அறிவுரை கூறியுள்ளார். இதை நம்பிய மூதாட்டி, செயினை கழற்றினார். அதை வாங்கிய நபர், பொட்டலத்தில் மடித்து கொடுத்துள்ளார்.சிறிது துாரம் சென்ற மூதாட்டி, அந்த பொட்டலத்தை சோதித்த போது, அதில் இருந்த செயின் காணாமல் போனது தெரிந்தது. இது குறித்து, உறவினர் உதவியுடன் அயனாவரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மர்ம நபர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ