உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடுகளின் பூட்டை உடைத்து 43 சவரன் கொள்ளை

வீடுகளின் பூட்டை உடைத்து 43 சவரன் கொள்ளை

குமரன் நகர், மேற்கு மாம்பலம், கிருஷ்ணப்ப நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் விவேக்,42. குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.நேற்று முன் தினம் மாலை விவேக் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 23 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. புகாரின்படி குமரன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சரஸ்வதி, தனியார் கல்லுாரி பேராசிரியர். நேற்று காலை திருவண்ணாமலை அருணாச்சலஸ்வரர் கோவிலுக்கு சென்று வீடு திரும்பினார். வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, 20 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது.சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை