மேலும் செய்திகள்
பழனி திருச்செந்துாருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
04-Feb-2025
சென்னை, விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:மகா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருநெல்வேலி, திருச்செந்துார், செங்கோட்டை, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு, அதிகளவில் மக்கள் சென்று வருவர். எனவே, பயணியரின் வசதிகாக, வழக்கமாக செல்லும் பேருந்துகளோடு, சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அந்த வகையில், வரும் 25ம் தேதி 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப, வரும் 26ம் தேதியும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணியர், www.tnstc.inஎன்ற இணையதளம் மற்றும் செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். பேருந்துகளை சீராக இயக்க, பிரதான நிலையங்களில் சிறப்பு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
04-Feb-2025