உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழிவுநீர் இணைப்பு கட்டாயம் மீறினால் 6 மாதம் சிறை

கழிவுநீர் இணைப்பு கட்டாயம் மீறினால் 6 மாதம் சிறை

சென்னை,சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தின் கழிவுநீர் பாதை இருக்கும் இடத்தை சுற்றியுள்ள பகுதி குடியிருப்பு வளாகங்கள், குடியிருப்பு உரிமையாளர்கள், கழிவுநீர் இணைப்பு பெறுவதை கட்டாயமாக்கும் சட்ட மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த, 2024ம் ஆண்டு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் திருத்த சட்டத்தில் கூறியிருப்பதாவது:தனியார் இடத்தில் இருந்து, 30 மீட்டர் துாரத்திற்குள், வாரியத்தின் கழிவுநீர் பாதை இருந்தால், அந்த வளாக உரிமையாளர் அல்லது குடியிருப்பவர், கழிவுநீரை வாரியத்தின் கழிவுநீர் பாதையில் வெளியேற்ற, அதற்குரிய அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.இணைப்பு கொடுப்பதற்கான செலவை, விண்ணப்பதாரர் ஏற்க வேண்டும். இவர்கள் கழிவுநீர் தொட்டி, கழிவுநீர் குட்டை, கழிவுநீர் வாகனங்களை பயன்படுத்தி, கழிவுநீரை அகற்றுதல் போன்ற வழிமுறைகளை பின்பற்றக் கூடாது.இதை மீறினால், ஆறு மாதம் வரை சிறை அல்லது 10,000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.அதன் பிறகும் மீறினால், ஒவ்வொரு நாளுக்கும் 500 ரூபாய் வரை, கூடுதல் அபராத தொகை விதிக்கப்படும். இதை எதிர்த்து ஆணை பெறப்பட்ட நாளில் இருந்து, 30 நாட்களுக்குள், மேலாண்மை இயக்குனருக்கு மேல் முறையீடு செய்யலாம். மேல் முறையீடு தொடர்பாக, 60 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை