உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 8 மாடுகள் பறிமுதல்

8 மாடுகள் பறிமுதல்

ஆவடி, ஆவடி - பூந்தமல்லி பிரதான சாலை, கோவர்தனகிரி, ஸ்ரீனிவாசா நகர் மற்றும் திருமுல்லைவாயில், சி.டி.எச்., சாலையில் திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில், ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.மொத்தம் கன்றுக்குட்டி உட்பட எட்டு பசு மாடுகளை பிடித்தனர். அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.இதுவரை, சாலையில் திரிந்த 35 மாடுகள் மற்றும் 20 கன்றுக்குட்டிகள் பிடிக்கப்பட்டுள்ளன. இதில், மாட்டின் உரிமையாளர்களுக்கு 3.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.இரண்டு முறைக்கு மேல் பிடிபடும் மாடுகள் ஏலத்தில் விற்கப்பட்டதில், 69, 500 ரூபாய் வசூலிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்