உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துாக்க மாத்திரை சாப்பிட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு

துாக்க மாத்திரை சாப்பிட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு

சேலையூர், சேலையூர் அடுத்த சந்தோஷபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மிதுன் மோகன், 33. இவர், குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவரது மனைவி அஸ்வினி, 31; ஐ.டி., ஊழியர். தம்பதியின் மகன் ஹிருத்வி, 7, மகள் ஆர்த்ரா, 4.ஹிருத்வி கடந்த ஜனவரியில் 'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தான். மகன் இறந்ததில் இருந்து மனதளவில் பாதிக்கப்பட்ட அஸ்வினி, மருத்துவரின் பரிந்துரையின்படி இரவில் துாக்க மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இவருடன் அவரது தாய் சுதா தங்கியுள்ளார்.வழக்கம்போல, நேற்று முன்தினம் இரவு துாங்க செல்லும் முன், மாத்திரை சாப்பிட்டு துாங்கி உள்ளார். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, மகள் ஆர்த்ரா வாயில் நுரை தள்ளி நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது, குழந்தை தவறுதலாக துாக்க மாத்திரை சாப்பிட்டது தெரிய வந்துள்ளது.இதையடுத்து, 'மகள் இறந்துவிட்டாள்' என கடிதம் எழுதி வைத்து விட்டு அஸ்வினி, பிளேடால் இடது கை மணிக்கட்டில் கிழித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.காலை 7:45 மணிக்கு, அஸ்வினியின் தாய் சுதா, குழந்தை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப அறையில் சென்றபோது குழந்தை இறந்ததும், மகள் தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது. சேலையூர் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை