உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விபரீதமான விளையாட்டு கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் பலி

விபரீதமான விளையாட்டு கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் பலி

சென்னை:செம்மஞ்சேரி, துலுக்காணத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் மகன் மனோஜ், 9; நான்காம் வகுப்பு மாணவர். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான, 40 அடி ஆழமான கிணறு உள்ளது. இரும்பு வலையால் மூடப்பட்டு உள்ளது. சிறுவர்கள் விபரீதம் உணராமல், அதன்மீது ஏறி குதித்து விளையாடி உள்ளனர். அப்போது, இரும்பு வலையில், குழாய் செல்லும் பகுதியில் உள்ள ஓட்டை வழியாக, மனோஜ் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். தகவலறிந்த பெற்றோர் பதறியடித்து வந்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்வழியில் சிறுவன் உயிரிழந்தான். செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை