உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடிகர் சங்கத்தை முற்றுகையிட முயன்ற 60 பேர் மீது வழக்கு

நடிகர் சங்கத்தை முற்றுகையிட முயன்ற 60 பேர் மீது வழக்கு

சென்னை:நடிகர் சங்க அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 60 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக, தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தை முற்றுகையிட போவதாக, தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி அறிவித்திருந்தார். இதற்கு, நுங்கம்பாக்கம் போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, வீரலட்சுமி உட்பட 60 பேர், வள்ளுவர் கோட்டம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின், தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தை முற்றுகையிட முயன்ற போது, நுங்கம்பாக்கம் போலீசார் அவர்களை கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை