உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாக்குறுதிப்படி சேவை வழங்காத கேளிக்கை விடுதி மீது வழக்கு

வாக்குறுதிப்படி சேவை வழங்காத கேளிக்கை விடுதி மீது வழக்கு

சென்னை, சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவில், தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த வேல்முருகன், புகார் ஒன்றை அளித்துள்ளார்.அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:'ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்' என்ற நிறுவனத்தினர், கடந்த 2019ம் ஆண்டு என்னை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, தங்களது 'ரிசார்ட்டில்' உறுப்பினராக சேர்ந்தால், ஆண்டுக்கு 15 நாட்கள் வீதம், இந்தியா முழுதும் உள்ள விடுதிகளில், 25 ஆண்டுகள் இலவசமாக தங்கிக் கொள்ளலாம் என்றனர்.இதை உண்மை என நினைத்து, 7.5 லட்சம் ரூபாய் செலுத்தினேன். இதையடுத்து, 2020ம் ஆண்டு மட்டும் இலவச சேவையை வழங்கிவிட்டு, அதன் பின், ஏதாவது சாக்கு போக்கு கூறி, எனக்கான சேவையை வழங்கவில்லை.எனவே, ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட் நிறுவனம் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.புகாரின் அடிப்படையில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விக்ரம் தயால் லால்வாணி, துணைத் தலைவர் சித்ரா, இயக்குனர்கள் லதா ராமநாதன், மாதவன் மேனன், சுமித் மகேஸ்வரி, பர்வீர் குமார் வோரா ஆகியோர் மீது, ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி