உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிநெடுக பேனர் வைத்த பா.ஜ.,  நிர்வாகி மீது வழக்கு

வழிநெடுக பேனர் வைத்த பா.ஜ.,  நிர்வாகி மீது வழக்கு

டி.பி.சத்திரம்,பா.ஜ.,வின் பொருளாதார பிரிவு ஏற்பாட்டில், மாநில செயற்குழு விளக்க பொதுக்கூட்டம், டி.பி.சத்திரம் சந்தையில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், கட்சியின் சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பொது மக்களுக்கு இடையூறாக சாலையில் 10க்கும் மேற்பட்ட பேனர்கள் வைத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கும், கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பேனர் வைப்பதற்காக போலீசில் முறையாக அனுமதி பெறவில்லை என போலீசார் தரப்பில் கூறினர்.இதையடுத்து, கூட்ட ஏற்பாடுக்கு போலீசில் அனுமதி வாங்கிய, பொருளாதாரப் பிரிவின் மாவட்டத் துணைத் தலைவர் வேல்முருகன் என்பவர் மீது டி.பி., சத்திரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ