உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நவீன தெரு பெயர் பலகை போஸ்டரால் அலங்கோலம்

நவீன தெரு பெயர் பலகை போஸ்டரால் அலங்கோலம்

திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலம் முழுதும், 'ஸ்டென்லஸ் ஸ்டீல்' எனும் துருப்பிடிக்காத இரும்பில், ஒளிரும் தன்மை கொண்ட 'ஸ்டிக்கர்' பயன்படுத்தி, தெருப்பெயர் பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதற்காக, பலகை ஒன்றிற்கு, 27,000 ரூபாய் வரை செலவாகிறது.தெரு பெயர் பலகைகள் கைக்கு எட்டும் வகையில் இருப்பதால், பலர் 'வாழ்த்து' மற்றும் 'கண்ணீர் அஞ்சலி' 'போஸ்டர்'களை ஒட்டிச் செல்கின்றனர். பின், மாநகராட்சி ஊழியர்கள் அவற்றை தண்ணீர் தெளித்து ஊற வைத்து, சுரண்ட முயற்சிக்கும் போது, தெரு பலகைகள் அலங்கோலமாக மாறிவிடுகின்றன.உடனடி தீர்வாக, தெரு பலகைகளில் போஸ்டர்கள் ஒட்டுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், தெருப்பலகைகள் என்ற பெயரில், பல லட்சம் ரூபாய் பணம் வீணாகும் அவலம் தொடரும். திருவொற்றியூர் மட்டுமின்றி, சென்னை மாநகராட்சி முழுதும் இதே நிலைமை தான் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை