உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சோழிங்கநல்லுார் மண்டலத்திற்கு ரூ.10 கோடியில் புதிய கட்டடம்

சோழிங்கநல்லுார் மண்டலத்திற்கு ரூ.10 கோடியில் புதிய கட்டடம்

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டல அலுவலகம், விரிவாக்கத்திற்கு முன் சோழிங்கநல்லுார் பேரூராட்சி அலுவலகமாக இருந்தது. தரைத்தளம், 2001ம் ஆண்டும்; முதல்தளம், 2011ம் ஆண்டும் கட்டப்பட்டது.இடப்பற்றாக்குறையால், வருவாய், சுகாதாரம் ஆகிய துறைகள், மண்டல அலுவலகத்தை ஒட்டி உள்ள மாநகராட்சி மண்டபத்தில் செயல்படுகின்றன. இதனால், மண்டபமும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தற்போதுள்ள கட்டடத்தை ஒட்டி, பின்பகுதியில் காலி இடம் உள்ளது. அதில் கூடுதல் கட்டடம் கட்ட, சில ஆண்டுகளுக்கு முன், 2.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பின், தற்போதைய மண்டல அலுவலகத்தை இடித்து, அதில் புதிதாக பெரிய அளவில் கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.இதையடுத்து புதிய கட்டடம் கட்ட 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. பருவமழை முடிந்தபின், கட்டுமான பணி துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை