உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடத்தியவர் கைது

அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடத்தியவர் கைது

வில்லிவாக்கம், வில்லிவாக்கம், கிழக்கு மாட வீதியில் செயல்படும் அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, நேற்று முன்தினம் மாலை வில்லிவாக்கம் உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் அதிரடியாக நுழைந்து ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வது உறுதியானது. இதையடுத்து வில்லிவாக்கம், பாரதி நகரைச் சேர்ந்த மோகன், 32 என்பவரை கைது செய்தனர். அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு பெண்னை மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை