உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சவக்கிடங்கில் சடலத்தை கடித்த எலி

சவக்கிடங்கில் சடலத்தை கடித்த எலி

பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன், 34. பொக்லைன் இயந்திர ஆப்ரேட்டர். இவர் குடும்ப பிரச்சனையில், நேற்று முன்தினம் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.பொன்னேரி போலீசார் சடலத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று பிரேத பரிசோதனை மேற்கொள்ள குப்பனின் சடலத்தை பார்த்தபோது, மூக்கு சேதம் அடைந்து இருந்தை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது, எலி கடித்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், குப்பனின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிந்தபின் சடலத்தை வாங்க மறுத்தனர். பொன்னேரி போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். அதை ஏற்று, உறவினர்கள் குப்பனின் சடலத்தை பெற்று சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை