உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடைபாதையை விட உயரமான சாலை கோபாலபுரத்தில் வரிப்பணம் வீணடிப்பு

நடைபாதையை விட உயரமான சாலை கோபாலபுரத்தில் வரிப்பணம் வீணடிப்பு

சென்னை:கோபாலபுரத்தில் புதிதாக போடப்பட்ட சாலை, நடைபாதையை விட உயரமாக உள்ளதால், அப்பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை மண்டலத்தில், 18 வார்டுகள் உள்ளன. அவற்றில் பொதுவாக, புதிதாக சாலை அமைப்பதற்கு முன், ஏற்கனவே போடப்பட்ட சாலையை சுரண்டிவிட்டு புது சாலை அமைப்பது வழக்கம்.ஆனால், கோபாலபுரம் கான்ரான் ஸ்மித் சாலையில், நடைபாதையை விட சாலை உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மழைக்காலத்தில் சாலை ஏது, நடைபாதை ஏது என்பதே தெரியாத நிலையில் உள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் எளிதாக இச்சாலையில் உள்ள நடைபாதையை, வாகன நிறுத்தமாக பயன்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: மாநகராட்சியில் ஒவ்வொரு துறையினரும், மற்ற துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து, மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவில்லை.இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, கோபாலபுரம் கான்ரான் ஸ்மித் சாலையைக் கூறலாம். இங்கு சிறு மழை பெய்தால் கூட, சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது. சாலையை விட நடைபாதை தாழ்வாக உள்ளதால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் மட்டுமின்றி, இச்சாலையில் வசிக்கும் குடியிருப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தை வைத்தே இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை, அதிகாரிகள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சம்பந்தப்பட்ட மாநகராட்சி பொறியாளரின் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டபோது இணைப்பை ஏற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Janarthanan
ஜூலை 08, 2024 09:48

சாலை உயரத்தை அதிகரித்து குடியிருப்புகளை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் மாநகராட்சியின் திட்டமிட்ட சதி


rasaa
ஜூலை 09, 2024 08:01

அனைத்து சாலைகளும் இப்படித்தான் போடப்படுகின்றது. பணம் சம்பாதிப்பது ஒன்றுதான் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் லட்சியம். இவர்கள் குடும்பம் உருப்படாது.


மேலும் செய்திகள்