உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் பெண்களின் பாதுகாப்பு 3,000 பேரிடம் கணக்கெடுப்பு!

சென்னையில் பெண்களின் பாதுகாப்பு 3,000 பேரிடம் கணக்கெடுப்பு!

சென்னை, ஷெனாய் நகர் திரு.வி.க., பூங்காவில், பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த, 'தப்புன்னு தெரிஞ்சா பட்டுனு கேளு' என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை, மேயர் பிரியா துவக்கி வைத்தார்.அவர் கூறியதாவது:ஒரு பெண் காலை 10:00 மணியாக இருந்தாலும் சரி, இரவு 10:00 மணியாக இருந்தாலும் சரி, சென்னை மாநகரத்தில் அப்பெண் பாதுகாப்பாக இருப்பதை உணர வேண்டும்.அவ்வாறு பாதுகாப்பாக உணர, பொதுமக்களின் பொறுப்பும் உள்ளது. பொது இடங்களில் பாலியல் தொல்லைகள் நடந்தால், அவற்றை தட்டிக்கேட்க தயங்க கூடாது.பெண்களின் பாகுபாடு களைய மற்றும் பாதுகாப்புக்கு வீடுகளில் இருந்தே மாற்றம் ஏற்பட வேண்டும்.ஒரு வீட்டில் ஆண், பெண் குழந்தைகள் இருந்தால், பெண் குழந்தை இப்படித்தான் அமர வேண்டும்; இப்படி தான் உடை அணிய வேண்டும் என்ற பாகுபாடு இல்லாமல் வளர்க்க வேண்டும். அப்போது தான், பாலின வேறுபாடு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.வட்டார துணை கமிஷனர் பிரவீன் குமார் பேசியதாவது:சென்னையில் 3,000 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலானவர்கள் சென்னை மாநகரம் தங்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.அதேநேரம், 62 சதவீதம் பொது இடங்களில் பாலியல் தொல்லைகள் நடந்தால், யாரும் தட்டி கேட்பதில்லை என தெரிவித்துள்ளனர். இதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தான், 'தப்புன்னு தெரிஞ்சா பட்டுனு கேளு' என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை