உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  23 பெண்களுக்கு மீன் கடை ஒதுக்கீடு

 23 பெண்களுக்கு மீன் கடை ஒதுக்கீடு

சென்னை, சென்னை, சைதாப்பேட்டை பகுதியில், 2023 'மிக்ஜாம்' புயல் மழையால், சாலையாரம் மீன் வியாபாரம் செய்து வந்த மீனவ பெண்கள் பாதிக்கப்பட்டனர்.அவர்களுக்கு, சைதாப்பேட்டை சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி, 27 லட்சம் ரூபாய் மதிப்பில், ஜோன்ஸ் சாலையில் மீன் அங்காடி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, 23 சாலையோர பெண்களுக்கு மீன் அங்காடிகள், ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான ஆணையை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ