உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்டர்வியூவுக்கு வந்த பெண்ணை கடத்தி அத்துமீறிய ஆட்டோ ஓட்டுனர்

இன்டர்வியூவுக்கு வந்த பெண்ணை கடத்தி அத்துமீறிய ஆட்டோ ஓட்டுனர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கர்நாடகாவில் இருந்து நேர்முகத் தேர்விற்காக சென்னை வந்த இளம்பெண்ணை, ஆட்டோவில் வீட்டிற்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவரை, போலீசார் தேடி வருகின்றனர்.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், தனியார் நிறுவனத்தில் நேர்முகத் தேர்விற்காக ரயில் வாயிலாக நேற்று முன்தினம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார்.

தள்ளி விட்டார்

பின், நிலையத்திற்கு வெளியே உள்ள ஆட்டோ நிறுத்தத்திற்கு வந்துள்ளார். அங்கு நின்றிருந்த, புழல் அடுத்த லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சசிகுமார், 32, என்பவரிடம், 'கோயம்பேடு செல்ல வேண்டும். சென்னை எனக்கு புதிது; அதனால், தங்குவதற்கு பாதுகாப்பான மகளிர் விடுதியை காட்டுங்கள்' என கேட்டுள்ளார்.இதையடுத்து, சசிகுமார் ஒரு விடுதியை காண்பித்துள்ளார். ஆனால், சுகாதாரம் காரணமாக வேறு விடுதி பார்க்கலாம் என அப்பெண் தெரிவித்துஉள்ளார்.இந்நிலையில் ஆட்டோ டிரைவர் சசிகுமார், 'இங்கு நல்ல விடுதி ஏதும் இல்லை. கொளத்துார் அருகே நல்ல விடுதி உள்ளது' எனக் கூறி, லட்சுமிபுரத்தில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.'சிறிது நேரம் இங்கு இருங்கள்; நான் சென்று அருகில் உள்ள விடுதியில் அறை இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன்' எனக்கூறி வெளியே சென்றிருக்கிறார்.சில நிமிடத்திற்கு பின், மீண்டும் வீட்டிற்கு வந்த சசிகுமார், 'மாலையில் தான் அறை காலியாகிறது; அதுவரை இங்கேயே ஓய்வெடுங்கள்' எனக் கூறியிருக்கிறார்.ஆனால், அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த இளம்பெண், வெளியே செல்ல முயன்றிருக்கிறார். அப்போது சசிகுமார், அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றதால், அவரை தள்ளிவிட்டு, வீட்டிற்கு வெளியே ஓடியிருக்கிறார்.மேலும், கொளத்துார் - ரெட்டேரி சந்திப்பில், ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம், நடந்த சம்பவத்தை பதற்றத்துடன் கூறியிருக்கிறார். புழல் போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என்பதால், புழல் போலீசாருடன் அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.

தப்பினார்

பின், போலீசார் அவரை அழைத்துக்கொண்டு, ஆட்டோ டிரைவர் சசிகுமாரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது, ஆட்டோவுடன் சசிகுமார் தப்பியது தெரிந்தது. ஆனாலும், போலீசார் அந்த பெண்ணிடம் புகார் பெற முயன்றனர்.அந்த பெண், நான் வேலைவாய்ப்பிற்காக வந்த நிலையில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. 'புகார் ஏதும் வேண்டாம்; நான் ஊருக்கே சென்று விடுகிறேன்' எனக்கூறி சென்று விட்டார்.புழல் போலீசாரின் விசாரணையில், ஆட்டோ டிரைவர் சசிகுமார் தன் மனைவி வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இளம்பெண்ணை ஏமாற்றி கடத்தி வந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

R SRINIVASAN
மே 23, 2024 08:06

இனி அரசை நம்பி பிரயோஜனமில்லை இந்த முறையில் வாழ்விழந்த பெண்கள் பூளன் தேவிகளாக மாறுங்கள் மேலும் சம்பத்குமார் என்பவர் இது எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது காமராஜர் ஆட்சியில் F V அருள் என்பவர் போலீஸ் கமிஷனர் ஆக இருந்த பொழுது குத்ரவாளிகளுக்கு அவர் சிம்ம சொப்பனமாக விளங்கினார் காரணம் அப்பொழுது போலீஸ் இலாகா மந்திரி கக்கன்ஜி போலீசிற்கு முழு ஸ்வதந்திரம் கொடுத்தார் ஆனால் சவுக்கு சங்கருக்கு ஒரு நீதி பிராமணர்களை இழிவாகப்பேசி ஜாதிக்கலவரத்தை தூண்டும் சில U TUBERGAL எந்த நடவடிக்கையும் இல்லை


tmranganathan
மே 22, 2024 07:13

தமிழகத்தில்தான் ஆட்டோவில் மீட்டர் படி ஹாஜ் எய்வதில் இரண்டு கழக நாதாரிக கொடுக்கும் ஆதரவுதான் ஆட்டோ ஓட்டிகளை இதுபோன்ற பெண்களை சீண்டும் வேலை செய்கிறார்கள் அவனை பிடித்தாலும் போலீஸ்காரன் தப்பிவிடுவான் indh நாய்கள் தங்கள் அம்மாவையும் சகோதரியும்கூட விடமாட்டார்கள் போதைக்கு அடிமையானதால்


sethu
மே 21, 2024 18:24

நிருபருக்கு வைரமுத்துவின் சாயல் அதிகமாகவே உள்ளது கருணாநிதி இப்போது இருந்திருந்தால் ஒருவேளை இவருக்கு மகுடமணி பட்டம் வழங்கி இருப்பர் என்னமோ போடா மாதவா உன்னால இந்த இந்த உலகமே வழிதவறிப்போகுதுப்பா சாராயம்


மு.செந்தமிழன்
மே 21, 2024 14:40

மிகப்பெரிய நம்பிக்கை துரோகம்


RAAJ68
மே 21, 2024 14:26

கதை படிப்பது மாதிரி உள்ளது அவனுடைய வீட்டில் இருந்து ஓடி வந்து போலீசை அழைத்துக் கொண்டு செல்கிறார்களாம் புதியதாக வந்த இடத்தில் அவ்வளவு சீக்கிரம் மறுபடியும் அந்த இடத்திற்கு போக வழி எப்படி தெரியும். செய்தி நம்பும் படியாக இல்லை தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும். புதியதாக சென்னைக்கு வரும் பெண்மணி எப்படி ஆட்டோ காரனை நம்பி ஒரு இடத்திற்கு போக முடியும் அவ்வளவு விவரம் இல்லாத பெண்ணா..நிச்சயம் இதில் ஏதோ வேறு ஏதோ மர்மம் உள்ளது.


திருஞானசம்பந்தம்
மே 21, 2024 10:20

பெண்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்


Ganapathy Subramanian
மே 21, 2024 09:55

உங்கள் ஆட்சியாளர்களால் இதை தடுக்க முடியாதென்றால் எதற்கு ஆட்சிக்கு வருகிறீர்கள்? பொள்ளாச்சியை சொல்லி ஓட்டு கேட்டவர்கள் இதற்கு ஏன் நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு இருக்கிறீர்கள்? எல்லா இடங்களிலும் இப்படித்தான் என்று சப்பை கட்டுகிறீர்கள்? பொள்ளாச்சி போலத்தான் எல்லா இடங்களிலும் புள்ளி கூட்டணியினர் இருப்பர் என்று சொல்லி இருக்க வேண்டியதுதானே?


Sampath Kumar
மே 21, 2024 09:25

இந்த சம்பவம் இன்னமோ தமிழ் நாட்டில் மட்டும் தான் நடக்குது என்றும் தீ மு க ஆட்சில்மட்டும் தான் நடக்குது என்றும் கட்டமைக்க முயலும் தாதிகளுக்கு இந்திய முழுவதும் ஆட்டோ காரனுக இப்படித்தான் இருக்கின்றார்கள் சந்தர்ப்பம் சூழலாய்ந்தால் கைவரிசையை காட்டுகிறார்கள் இதுகுஎந்த அரசும் ஒரு மண்ணும் பண்ணமுடியாது சும்மா சொல்வதே வாடிக்கையாக கொண்டு உள்ள நபர்களை யோசித்து கருத்து சொல்லுங்கள் இல்லாவிட்டால் அனைத்தையும் மூடிக்கிட்டு இருங்கள்


rao
மே 21, 2024 09:51

This type of incident occurs all over the world,but U should ponder why people express their anguish against this drug mafia party is there cadre and police force are of the same tribe and the government is not able to control the law and order in the state.


Rajamani K
மே 21, 2024 10:31

உங்ககிட்ட யாரோ தி மு க வை சம்பந்தப் படுத்தி சொன்ன மாதிரி பதிவு உலகம் முழுவதும் நடப்பது தான் ஆனால் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லங்கற மாதிரி உள்ளது உங்கள் pathivu


Barakat Ali
மே 21, 2024 11:49

பாசு நீங்க டுமீலு நாடு தாண்டி இந்தியா புல்லா சுத்தி பார்த்து இப்படித்தான் எல்லா மாநிலத்திலும் இருக்குது ன்னு கண்டுபுடிச்சுட்டீங்க போல ஆஹான்னானாம்


DUBAI- Kovai Kalyana Raman
மே 21, 2024 09:18

ஓலா அல்லது ரெட் டாக்ஸி, உபேர் போன்ற நம்பகமான ஆட்டோ, டாக்ஸி மட்டும் தான் பெண்கள் பயன் படுத்த வேண்டும் இது ஒரு பாடம்


Vivekanandan Mahalingam
மே 21, 2024 09:16

புத்தி சாலி பெண் - இல்லாவிட்டால் காவல் துறையும் அத்து மீற வாய்ப்புண்டு


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை