உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாடியில் இருந்து விழுந்து போதை வாலிபர் உயிரிழப்பு

மாடியில் இருந்து விழுந்து போதை வாலிபர் உயிரிழப்பு

பெருங்களத்துார், புது பெருங்களத்துார், பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் அருண் சீனிவாசன், 36. நேற்று முன்தினம் இரவு, நண்பர்கள் நரேஷ்குமார், நடராஜன் ஆகியோருடன் சேர்ந்து, வீட்டின் முதல் மாடியில் மது அருந்தினர்.மது அருந்திவிட்டு, நண்பர்கள் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், மாடியில் இருந்த அருண் சீனிவாசன், போதையில் அங்கிருந்து தவறி கீழே விழுந்தார்.படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு, பெருங்களத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், ஏற்கனவே அவர் இறந்தது தெரியவந்தது. பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை