உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற பழைய பல்லாவரத்தில் எதிர்பார்ப்பு

கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற பழைய பல்லாவரத்தில் எதிர்பார்ப்பு

பல்லாவரம், தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலம், 21வது வார்டு, பழைய பல்லாவரம், திருத்தணி நகரில், 12 தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது.திருத்தணி நகர், 1வது பிரதான சாலையில் இரண்டு இடங்களில் கால்வாயை ஆக்கிரமித்துள்ளனர். இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. துர்நாற்றம் அதிகரித்து, கொசு தொல்லையும் பெருகி விட்டது.மழைநீர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கலெக்டர் முதல் மாநகராட்சி வரை, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தொடர்ந்து மனு கொடுத்து வருகின்றனர். ஆனால், யாரும் இதை கண்டுக்கொள்ளவில்லை. இது குறித்து, திருத்தணி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:இரண்டாவது பிரதான சாலையில், பொதுப்பணித் துறை அளவீடு செய்து கொடுத்தும், கால்வாய் கட்ட, மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. பல்லாவரம்- துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக செல்லும் குடிநீர் குழாயை உடைத்து விட்டதால், திருத்தணி நகருக்கு மெட்ரோ குடிநீர் வருவதே இல்லை. எதையும் பற்றியும் கண்டுக்கொள்ளாத, மாநகராட்சி கமிஷனர் இதையாவது கண்டுக்கொள்வாரா?இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்