உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அந்தியோதயா ரயில் பயணி திடீர் மரணம்

அந்தியோதயா ரயில் பயணி திடீர் மரணம்

தாம்பரம், மேற்கு வங்கம், சந்த்ராகாச்சி ரயில் நிலையத்தில் இருந்து, அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் இரவு தாம்பரம் வந்தது.அந்த ரயிலில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுண்டால் மார்ட்டி, 35, என்பவர், நண்பர்களுடன் பயணம் செய்தார்.தாம்பரம் வந்ததும், சுண்டால் மார்ட்டி மயங்கிய நிலையில் இருந்தார். உடன் வந்தவர்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவர்களுடன் சென்ற போலீசார், பரிசோதனை செய்ததில் அவர் இறந்தது தெரியவந்தது.இதையடுத்து, அவரது சடலத்தை கைப்பற்றிய தாம்பரம் ரயில்வே போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை