உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை கழிவுகளுடன் வரவேற்கும் அனுமந்த் சாலை

குப்பை கழிவுகளுடன் வரவேற்கும் அனுமந்த் சாலை

ஆவடி, ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில், 29 வது வார்டு, அனுமந்த் நகரில் 30 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, சாலையின் நுழைவாயிலில் பல மாதங்களாக, குப்பைகளுடன், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.பகுதிவாசிகள் தொடர்ந்து குப்பைகளை கொட்டுவதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் கழிவுநீர் தேங்கும் பகுதியில் பள்ளம் தோண்டி பார்த்தனர். இருப்பினும் கழிவு நீர் ஓடுவது நிற்கவில்லை. இதனால் பணியைறை பாதியில் நிறுத்தி சென்றனர்.இப்பகுதியினர் கூறியதாவது:இந்த குறுகிய சாலையில், தனியார் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், வாகனங்கள் சென்று வர இடையூறாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், குப்பை கொட்டுவதற்கு மாற்று வழியை ஏற்படுத்தி, கழிவு நீர் பாய்வதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தேவையில்லாத வாகனங்கள் சாலையில் நிறுத்துவது தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி