உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவில் பூசாரிக்கு ஜாமின்

கோவில் பூசாரிக்கு ஜாமின்

சென்னை, பாலியல் வழக்கில் கைதான, சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரிக்கு, உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி, தன்னை பாலியல் வன்முறை செய்ததாக, சாலிகிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். விருகம்பாக்கம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த கார்த்திக் முனுசாமி, கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஜாமின் மனுவை, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனுத் தாக்கல் செய்தார். மனு, நீதிபதி தமிழ்செல்வி முன், விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின், கார்த்திக் முனுசாமிக்கு ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார். விருகம்பாக்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு வாரம் கையெழுத்திடும்படி, நிபந்தனை விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை