உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ் மீது பைக் மோதி ஒருவர் பலி

பஸ் மீது பைக் மோதி ஒருவர் பலி

ஆலந்துார், சென்னை, பள்ளிக்கரணை, கைவேலி, தந்தை பெரியார் நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் ஜோதிவாசன், 19. இவர் மடிப்பாக்கம், கைவேலி, மேம்பாலம் கீழே உள்ள இணைப்பு சாலையில் அதிவேகமாக 'ஹீரோ ஜூம்' பைக்கில் சென்றார்.திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த தனியார் பேருந்தின் பின்புறம் மோதினார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதுகுறித்து மவுன்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விபத்திற்கு காரணமாக பேருந்தை சாலையில் நிறுத்தியிருந்த ஓட்டுனர், மதுராந்தகம் ஒன்றியம் கள்ளபிரான்புரத்தைச் சேர்ந்த கார்த்திக், 33, என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை