உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொடர் மின்தடையால் அரும்பாக்கத்தில் மறியல்

தொடர் மின்தடையால் அரும்பாக்கத்தில் மறியல்

அரும்பாக்கம், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியில், 'ஜே பிளாக்' பகுதியில் வெல்கம் தெரு உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் ஒரு மாதமாக, அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால், அப்பகுதிவாசிகள், மின்வாரிய அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. நேற்று காலை முதல் மாலை வரையும், பல மணி நேரம் இடைவெளியில் மின்தடை ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர், எம்.எம்.டி.ஏ., காலனி பிரதான சாலையில், நேற்று மாலை 6:30 மணியளவில், மறியலில் ஈடுபட்டனர்.சம்பவம் அறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தியதால் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை