உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புத்தக வெளியீடு

புத்தக வெளியீடு

சென்னை, 'ஜெம்' மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர்.சி.பழனிவேலுவின் சுயசரிதையை சொல்லும், 'கட்ஸ்' புத்தக வெளியீட்டு விழா, கோவை அவிநாசி சாலையில் உள்ள 'லீ மெரிடீயன்' ஹோட்டலில், வரும் 27ம் தேதி நடக்கிறது. புத்தகத்தை டாடா சன்ஸ் நிறுவன தலைவர் பத்மபூஷண் என்.சந்திரசேகரன் வெளியிட உள்ளார். இந்நிகழ்வில் சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஜெம் நிறுவன டிரஸ்டி ஜெயா பழனிவேலு, ஜெம் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பி.செந்தில்நாதன், பிரியா செந்தில்நாதன், டாக்டர் பிரவீன்ராஜ், பிரபா பிரவீன்ராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை