உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோமா நிலையில் பெண்ணுக்கு மூளையில் அறுவை சிகிச்சை

கோமா நிலையில் பெண்ணுக்கு மூளையில் அறுவை சிகிச்சை

சென்னை, கோமா நிலையில் இருந்த அந்தமான் பெண்ணின் மூளையில் உருவாகியிருந்த கட்டியை, சென்னை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இதுகுறித்து, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையின் நரம்பியில் அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் ரூபேஷ் குமார் கூறியதாவது:அந்தமானைச் சேர்ந்த ஒரு பெண் கருப்பை நீக்க சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மூளைக்கு வெளியே 8 செ.மீ., அளவுக்கு கட்டி உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது. அதற்கான சிகிச்சைக்காக முதுகுத்தண்டில் ஊசி செலுத்தும்போது, உணர்வு இழந்து கோமா நிலைக்கு சென்றார்.இந்நிலையில், அந்தமானில் இருந்து விமானம் வாயிலாக சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவமனையில் எனது தலைமையில் டாக்டர்கள் ஹரீஷ் சந்திரா, சரண்யன், அருள்செல்வன் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் பெண்ணின் தலைக்குள் உருவான கட்டியை அகற்ற முடிவு செய்தோம்.தலை ஓட்டுக்குள் உள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்தாமல் கட்டியை அகற்றுவது என்பது சிக்கலான விஷயம். இருந்தபோதிலும், அதனை மிக நுட்பமாக மேற்கொண்டு கட்டியை அகற்றினோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை