உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரஞ்சித், பொற்கொடி உட்பட 1,500 பேர் மீது வழக்கு

ரஞ்சித், பொற்கொடி உட்பட 1,500 பேர் மீது வழக்கு

சென்னை:அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்த், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி உட்பட, 1,500 பேர் மீது, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி, நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்த் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், 1,500 பேர் பங்கேற்றனர்.இந்நிலையில் நேற்று, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டது, கூட்டம் கூடியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆனந்த், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, சினிமா இயக்குனர் ரஞ்சித், சமூக சமத்துவ படை தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., உட்பட, 1,500 பேர் மீது, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி