உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்ட்ரல் - ஆவடி தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்

சென்ட்ரல் - ஆவடி தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை, சென்னை ரயில் கோட்டத்தின் செய்திக்குறிப்பு:ஆவடி ரயில்வே பணிமனையில் இன்றும், நாளையும் நள்ளிரவு 12:30 மணி முதல் அதிகாலை 3:30 மணி வரை, ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு 12:15 மணி ரயில் இன்றும், நாளையும், ரத்து செய்யப்படுகிறது  ஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் அதிகாலை 3:00 மணி ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது  பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் இரவு 10:45 மணி ரயில் இன்றும், நாளையும் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்  பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் அதிகாலை 3:30 மணி ரயில் இன்றும், நாளையும்ஆவடியில் இருந்து இயக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சேவையில் மாற்றமில்லை

சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனால், எழும்பூர் ரயில்வே பணிமனையில் இன்று நடக்க இருந்த பணிகள் ரத்து செய்து, மறுதேதி அறிவிக்காமல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. இதனால், எட்டு விரைவு ரயில்களின் சேவையில் செய்யப்பட்ட மாற்றங்கள் ரத்தாகிறது.சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் காலை 7:45 மணி முதல் இரவு 7:45 மணி வரை ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்கள், வழக்கம் போல் இன்று இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை