உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செல்லம்மாள் நினைவு செஸ் செங்கை சிறுவர்கள் அபாரம்

செல்லம்மாள் நினைவு செஸ் செங்கை சிறுவர்கள் அபாரம்

சென்னை, சீயோன் ஆல்வின் குருப் ஆப் இன்ஸ்டிடியூட் மற்றும் மவுன்ட் செஸ் அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான செல்லம்மாள் நினைவு கோப்பை மாநில செஸ் போட்டி, சேலையூரில் உள்ள ஆல்வின் பப்ளிக் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், 8, 10, 12, 14 மற்றும் 18 வயதுக்குட்பட்ட இருபாலருக்கும், தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. 'பிடே ராபிட்' அடிப்படையில், சுவிஸ் முறையில் போட்டிகள் நடந்தன.பல்வேறு பகுதிகளில் இருந்து, 160 சிறுமியர் உட்பட 520 சிறுவர்கள் பங்கேற்றனர். மொத்தம் ஆறு சுற்றுகள் அடிப்படையில் போட்டிகள் நடந்தன.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சீயோன் ஆல்வின் குரூப் ஆப் பள்ளியின் சேர்மன் விஜயன் பரிசுகளை வழங்கினர்.ஒவ்வொரு போட்டியிலும் முதல் 15 இடங்களை பிடித்த சிறுவர் - சிறுமியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ